Sunday, Feb 9, 2025

யாழில் இருந்து சென்ற அதி சொகுசு பேருந்து தீ விபத்து

By Jet Tamil

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு