பற்றிக் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விற்பனை நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.00மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன் தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாகாண தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜெயந்திநகர் பகுதியில் குறித்த பயிற்சி நெறியானது 1 மாதம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் 15 பேர் பங்குபற்றி இன்று சான்றிதழ் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் முதலாக குறித்த பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.