Friday, Jan 17, 2025

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

By kajee

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மயிலங்காடு பகுதியில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, எழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சுவாம்பிள்ளை வவி (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களாக அவரை காணாத உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் அவரது சடலம் நேற்றையதினம் தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவர் மது போதையில் கிணற்று கட்டினில் உறங்கியவேளை அவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றது.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு