Welcome to Jettamil

அமெரிக்கா இலங்கையை விட பிச்சை எடுக்கும் நாடு – உதய கம்மன்பில தெரிவிப்பு

Share

அமெரிக்கா இலங்கையை விட பிச்சை எடுக்கும் நாடு என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதாவது, நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

டொலருக்கு பதிலாக பிட்ஸ் என்ற சர்வதேச நாணய அலகு கொண்டுவரப்பட வேண்டும் என உலகம் தற்போது பேசுகிறது. அவ்வாறான சர்வதேச நாணய அலகு கொண்டுவரப்பட்டால் அமெரிக்காவின் நிதி பலம் அங்கேயே முடிந்துவிடும்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கடனை செலுத்துவதற்கும் டொலர்கள் இல்லாத காரணத்தினால், கடந்த வருடம் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் டொலரில் நடைபெறுவதனால் அமெரிக்காவை விட வேறு எந்த நாட்டிற்கும் நன்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை