பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு மேலதிகமாக, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக நீண்டகால முதலீடுகளை நாட எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு மற்றும் பலதரப்பு நிறுவனங்களுக்கு இலங்கை தொடர்பாக தேவையான பரிந்துரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.