Welcome to Jettamil

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

Share

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள் காலை 08.00 மணிக்கு பிந்தாமல் உரிய முறையில் வருகைதரல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நியமனதாரர்கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம் என்றும் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பிலக்கத்தினைக் குறித்துக் கொள்வது தங்களுக்கான ஆசனங்களை இனங்காண்பதற்கு இலகுவாய் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை