Welcome to Jettamil

திருகோணமலையில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் மோதல்: இருவர் படுகாயம்!

Share

திருகோணமலையில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் மோதல்: இருவர் படுகாயம்!

​திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று(20) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
​இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேக்கரி ஆட்டோ அதிகாலை வேளையில் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

​(கியாஸ் ஷாபி)

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை