Monday, Jan 13, 2025

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது – சுகாஷ் அறிவிப்பு

By kajee

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

போராடினால் மட்டுமே இனம் வாழும். போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம். இனத்துக்காக இறுதிவரை விடிவுவரை போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு