Welcome to Jettamil

கனேடிய தமிழ் யுவதி யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் மரணம்

Share

கனேடிய தமிழ் யுவதி யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் மரணம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் தமிழ் பெண் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஸ்கார்பரோவில் வசித்த 22 வயதுடைய சத்தீஸ்வரன் சயினகா என்ற யுவதியே இந்த துயரமான முடிவை சந்தித்துள்ளார்.

சயினகா யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பூர்வீக இடமான வடமராட்சி – கல்லுவத்திற்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தார். ஆனால், அவர் கனடாவில் இருந்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வந்ததும், அவர் தெளிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல், கடந்த ஐந்தாம் திகதி அவர் உயிரிழந்தார்.

சோகத்தில் மூழ்கிய கல்லுவம்

சயினகாவின் திடீர் மரணம், வடமராட்சி கல்லுவம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக கனடாவில் வசித்து வந்த அவர், தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் மரணமடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று கல்லுவத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை