பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையின் ஏழை மக்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ் தென்மராட்சி – நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இடம்பெற்றிருந்தது.
நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையின் தலைவர் ரத்னஸ்ரீ தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் கலந்து கொண்டு நாவற்குழியில் உள்ள தேவைப்பாடுடைய சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி உதவித்திட்டம் சீனாவின் புத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.