மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடரேற்றி, மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.







