Sunday, Jan 19, 2025

இந்திய மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை..!

By jettamil

இந்திய மீனவர்களை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை..!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெறும் கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

அவர்களது குடும்பம் மற்றும் மீனவர்களின் நலன் கருதி அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது, சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு