போருக்குள் எங்களை இழுக்க வேண்டாம் – டிரம்ப் க்கு பதிலடி கொடுத்த பிரித்தானியா
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தைச் சீர்செய்ய பிரித்தானியாவும் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக லண்டனில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரித்தானியா ஒருபோதும் இந்த விரிவான போருக்குள் தன்னை இழுத்துக் கொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள நாடுகள் அமெரிக்காவிற்கு உதவாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், பிரித்தானியாவின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்படும் என ஸ்டார்மர் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும், கடல் வழிப் பாதைகளைப் பாதுகாப்பது குறித்து அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 53 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவியை ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அதேவேளை, இந்தச் சூழலைப் பயன்படுத்தி விலையை ஏற்றும் எரிபொருள் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்தப் போர் புடினுக்குச் சாதகமாக மாறுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.





