Sunday, Feb 9, 2025

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்..!

By jettamil

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்..!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு