நல்லூரானை தரிசித்த பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா
தென்னிந்திய திரைப்பட நடிகையான ரம்பா அவர்கள் இன்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்தார். இதன்போது அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளும் உடனிருந்தனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காக ரம்பா அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக குறித்த நிகழ்வானது எதிர்வரும் 2024.02.09 அன்று பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ரம்பாவும் குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














