இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, புதிய கட்டணங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணம் 17,928 ரூபாவிலிருந்து 21,467 ரூபாவாகவும், பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் 3,774 ரூபாவிலிருந்து 4,483 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை 58,974 ரூபாவிலிருந்து 117,949 ரூபாவாக அதிகரிக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.