கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளங்களில் ஒன்றான கல்மடுகுளம் தற்பொழுது புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருவதன் காரணமாக குளத்தில் பின் பகுதிகள் உள்ள காட்டுப்பகுதியில் இரண்டு நாட்களாக தீபரவி வருவதாக மக்கள் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்றைய தினம்17.07.2023 கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்
அத்துடன் சம்பவம் தொடர்பாக வன பாதுகாப்பு பிரிவினருக்கும் தெரிவித்துள்ளனர்
அப்பகுதியில் சில பகுதிகளில் தீயில் எரிந்தநிலையில் காணப்படுவதாகவும் சில பகுதிகளில் தற்பொழுதும் தீ பரவல் இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழக்கூடிய நிலையில் தீப்பரவல் இடம்பெற்று வருவதாகவும் வன வளத்தினை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியில் நேரில் சென்று பார்வையிட்டு காட்டுத்தீனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது