பிரான்ஸில் Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்ததில் சிறுமிகள் தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தின் போது இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் Coupvray நகரில் உள்ள வீடொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் இரு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், அவர்களில் சிலர் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆயினும் அந்த வீட்டுக்குள் 8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
விரைவாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் நிலமை கைமீறிச் சென்றுள்ளது. இதனால் தீயினுள் சிக்கி குறித்த இரு சிறுமிகளும் பலியானதுடன், ஒரு பெண்ணும் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.