10ம் திகதிக்கு முன் எரிபொருள் மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானம்!
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்கும் முயற்சியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கமைய, அந்த மானியங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
காலி – ஹபராதுவ பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுடன் கருத்து பகிர்ந்த அவர், குறித்த மானியங்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி தெரிவித்தார்.
மேலும், சிறு தொழிலாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும், நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் இந்த எரிபொருள் மானியங்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் பொழுது, மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டி, அந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தில் உள்ளது என்று கூறினார்.