Welcome to Jettamil

சர்வதேச நீதிமன்றை நாடுவதில் அரசாங்கம் இரட்டை கொள்கை:  இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

Share

இலங்கையில் தமிழர்கள் போரினால் வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் இரட்டைக்கொள்கையை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சர்வதேச விசாரணை கோரப்படும்போது, இலங்கை அரசாங்கம், நாட்டின் நீதிமன்றக்கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கைக்குரிய விடயத்தை தெரிவித்து வருகிறது.

இலங்கையின் நீதித்துறை மூலம் இந்த விடயத்தை கையாளமுடியும் என்ற நிலையில் சர்வதேச நீதிமன்றம் இதற்கு அவசியமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.

எனினும் இலங்கையின் கடற்பரப்பில் பாரிய சேதத்தை விளைவித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில், வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதிலிருந்து ஏதோ ஒன்றை இலங்கை அரசாங்கம் மறைக்கமுயல்கிறது என்றே சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை