கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கூடிய காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இது தவிர, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள்
கிழக்கு மாகாணம் மற்றும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் 50 மிமீக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளில், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காற்றின் வேகம் (30-40) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
பொதுமக்கள், இடியுடன் கூடிய மழை காரணமாக தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.