Welcome to Jettamil

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்

Share

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்

உடல் முழுவதும் ஆக்ஸிஜனை அனுப்பவும் பிற தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற நுரையீரல் உதவுகிறது.

நம்மை வாழ வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரலை நாம் ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

தக்காளி: தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பி உள்ளது.

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் என்ற மூலப்பொருள் இருப்பதால் அதிகமான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்: மெக்னிசீயத்தை உள்ளடக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, மற்றும் பூசனி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை சுவாசபாதைகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் எல்- சல்போராபேன் இருப்பதால் நுரையீரலில் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

க்ரீன் டீ: க்ரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

ஆப்பிள்: ஆப்பிளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நுரையீரல் தொற்றுகளை குறைக்கும்.

மீன்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 இருப்பதால் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை