Welcome to Jettamil

தமிழகத்தில் கடும் வெப்பக் காலநிலை – வெப்பத்தை சமாளிக்க சுகாதாரத்துறை பொது மக்களுக்கு ஆலோசனை

Share

தமிழகத்தில் வெப்பக் காலநிலையை சமாளிக்கும் வகையில் சுகாதாரத்துறையால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மழைகாலம் முடிந்து தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக கடும் வெயில் நிலவுகிறது.

இதனால் குழந்தைகள் பெரியவர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் வயதானோர் கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குளே இருக்க அறிவுத்தப்படுகிறார்கள்.

உடல் சூடு தோலில் எரிச்சல் வாந்தி மயக்கம் தலைவலி ஏற்பட்டல் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை