Welcome to Jettamil

இஷாரா செவ்வந்தி வழக்கில் மனிதக் கடத்தல்காரர் ஆனந்தனின் மாமா யாழில் கைது!

Share

இஷாரா செவ்வந்தி வழக்கில் மனிதக் கடத்தல்காரர் ஆனந்தனின் மாமா யாழில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில், ஏற்கனவே ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளை அடுத்து, இன்று ஆனந்தனின் மாமா ஒருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் விசாரணைகளின் அடிப்படையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சிலரும் யாழ்ப்பாணத்தில் விரைவில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடத்தலுக்குப் பயன்படுத்திய படகு கைப்பற்றப்பட்டது:

இதேவேளை, இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்குக் கொண்டு சேர்ப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட படகு தற்போது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தைக் காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவானவர்கள் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை