புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்
நாட்டில் முன்னெடுக்கப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான பகுதியில் ஒரு பாதைக்கு புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.