Welcome to Jettamil

பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களை வழங்கும் பாகிஸ்தான் – ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

Share

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்கி வருவதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “இரண்டு நாட்கள் தீவிரமான விவாதங்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இத்தகைய விரும்பத்தகாத ஆத்திரமூட்டல் சம்பவங்கள் வருந்தத்தக்கது. இது நிச்சயமாக தவறானது.

பாகிஸ்தானின் பிரதிநிதிக்கு நாங்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால், கடந்த காலத்தில் நாங்கள் பயன்படுத்திய ஏராளமான சம்பவங்களை கூறலாம். ஐநா சாசனத்தின் கொள்கைகளை இந்தியா நிலைநிறுத்துகிறது, நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்று கூறுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை