Welcome to Jettamil

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Share

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரசின் புதிய வரிக் கொள்கையின்படி, ஒரு லீட்டர் டீசல் ரூ.34 ஆகவும், ஒரு லீட்டர் பெட்ரோல் விலை 38 ஆக அதிகரிக்கும் என்றும், அடுத்த வருடம் பொருளாதாரத்தை வளமான பொருளாதாரமாக மாற்ற முயற்சித்தாலும் பொருளாதாரம் நிச்சயமாக எதிர்மறையாகவே இருக்கும் என்கிறார் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

ஐக்கிய குடியரசு முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணவக்க,

நீண்டகாலமாக வற் இல்லாமலிருந்த மேலும் 97 பொருட்களுக்கு வற் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதில் நாடாளுமன்ற மரபை பலவந்தமாக அங்கீகரித்து பெரும்பான்மை பலம் இருந்தும் அரசாங்கம் தனது ஒழுக்கமின்மையையும் அநாகரிகத்தையும் இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5% அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும்,

இது உலகில் எந்தவொரு நாடும் குறுகிய காலத்தில் அடையக்கூடிய நிலைமை அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நலன்புரி நன்மைகள் திட்டம் – தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் 2022 (2023)

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை