Wednesday, Feb 5, 2025

கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோர் தொடர்பில் வெளியான தகவல்

By Jet Tamil

கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளிலிருந்து தங்களது வேலைகளை செய்தனர்.

இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை 20 வீதமாக குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, கோவிட் பெருந்தொற்று நிலைமைக்கு முன்னதாக நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்தோரின் எண்ணிக்கை வெறும் ஏழு சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பெருந்தொற்று காலப் பகுதியில் போக்குவரத்து பாரியளவில் சரிவடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், வீட்டிலிருந்து வேலை செய்வதனால் போக்குவரத்து செலவுகளை குறைக்க முடியும் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு