Welcome to Jettamil

உயிருடன் இருந்தால் துரத்தி துரத்தி கொ**ல்லுவோம் – நெதன்யாகுவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

Share

உயிருடன் இருந்தால் துரத்தி துரத்தி கொ**ல்லுவோம் – நெதன்யாகுவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போர் மூன்றாவது வாரமாக தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தங்களது முக்கிய இலக்காக மாற்றியுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை இன்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நெதன்யாகுவை “குழந்தைகளை கொன்ற குற்றவாளி” என கடுமையாக விமர்சித்துள்ள IRGC, “அவர் உயிருடன் இருக்கும் வரை அவரைத் தொடர்ந்து துரத்தி தாக்குவோம்” என கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதற்கிடையில், நெதன்யாகுவின் உடல்நிலை மற்றும் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழலில், ஈரான் இந்த நேரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நெதன்யாகுவின் இருப்பிடங்கள் என சந்தேகிக்கப்படும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரானின் இந்த புதிய எச்சரிக்கை இஸ்ரேல் தரப்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை