Welcome to Jettamil

பிரபாகரன் மகள் உயிரோடு இருக்கிறாரா? – திருமாவளவன் கருத்து

Share

பிரபாகரன் மகள் வீடியோ விவகாரம் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

எல்.டி.டி.இ. அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி இளம்பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, பலர் இந்த வீடியோவில் இருப்பது பிரபாகரனின் மகள் துவாரகா என்றும்,

சிலர் இது துவாரகா இல்லை என்றும், சிலர் இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,

இப்படிப்பட்ட தகவல்களில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி அவர் வெளிப்படையாக தோன்றினால் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் வெளிவருவது வேதனை அளிக்கிறது.

அவர்கள் உயிரோடு இருந்தால் அது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் வௌிச்சத்திற்கு வரும்போது அதை ஏற்போம். இப்போது துளியளவில் கூட நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை