Welcome to Jettamil

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் தெரிவு

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவராக யோ.நெவில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை அமைப்பதற்கான வேலைகள் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகள் கிளை ஊடாக முன்னெடுக்கப்படுமென தெரியவருகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய வேட்பாளர்களாக த.டிசான்,ஜெ.ஜெயகரன், யோ.நெவில்குமார் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் யோ.நெவில்குமார் 206 வாக்குகளையும் ஜெ.ஜெயகரன் 151 வாக்குகளையும் த.டிசான் 96 வாக்குகளையும் பெற்றனர்.

206 வாக்குகளை பெற்ற யோ. நெவில்குமார் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக சில்வஸ்ரார் ஜெல்சின் 2022 ஜுன் மாதம் தெரிவு செய்யப்பட்டு இதுவரை காலமும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்கள் தெரிவான பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை