Welcome to Jettamil

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விளக்கமறியலில்!

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போதை மாத்திரை மற்றும் போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 20 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ கூட பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார்.

நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் தாழமுக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குறித்த மாணவனை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த மாணவன் ஏற்கனவே திருநெல்வேலிப் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாமல் வராமல் விடுவதும் ஆதரவு தான் : ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை