Welcome to Jettamil

கரூர் விபத்து: விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை

vijay

Share

கரூர் விபத்து: விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இனி ஒரு தலைவராகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி கரூர் மாவட்டத்தில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தோர் குடும்பங்களையும் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:

விஜய்க்கு அறிவுரை

“இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் இனி ஒரு தலைவராகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.”

இந்த விவகாரத்தை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்றும், நீதிமன்றம் விஜய்க்கு அறிவுரை சொல்லும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் அழுத்தமான சட்டத்தை, நாட்டுக்கே முன் உதாரணமாகக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செந்தில் பாலாஜிக்குப் புகழாரம்

விபத்து நடந்த இடத்தை உடனடியாக வந்து ஆய்வு செய்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.

“செந்தில் பாலாஜிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஏன் வந்தார் எனக் கேட்பதை விட, வந்தார் என்பது முக்கியம். அது அவரின் பகுதி. அவர் வீடு இருக்கும் பகுதி. அவர் ஊர்… அவர் மக்கள். மேற்கொண்டு உயிர்ச் சேதம் ஏற்படுத்தாமல் காப்பாற்றிய பாலாஜிக்கு நன்றி,” என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார்.

முதல்வருக்கும் காவல்துறைக்கும் நன்றி

பாலத்தின் அருகே அனுமதி கொடுக்காமல் இருந்ததற்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், “பாலத்தின் அருகே அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்,” என்றார்.

“முதலமைச்சர் பண்பான தலைவராக இந்த விஷயத்தில் நடந்திருப்பது பெருமையாக உள்ளது. காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நானும் அப்படி வந்துள்ளேன். அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால், இதுபற்றி அதிகம் பேச முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை