Welcome to Jettamil

லங்கா ஐஓசிக்கு எரிபொருள் நிலையங்களை வழங்க முடியாது…

Share

லங்கா ஐஓசி நிறுவனம் மேலதிக எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு, அரசாங்கம் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களை திறக்க  பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் நிறுவனங்கள், ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே, இந்திய நிறுவனத்துக்கு அவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயக்கம் வெளியிட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்க, லங்கா ஐஓசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டியுள்ளதால், மேலதிகமாக எரிபொருள் நிலையங்களைத் திறக்க லங்கா ஐஓசிக்கு அனுமதி வழங்க விரும்பவில்லை, என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி அதிக எரிபொருள் நிலையங்களைக் கோரியிருந்தாலும், வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்களை அழைப்பதற்கான செயல்முறையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவி ட்டதால், எங்களால் அனுமதி வழங்க முடியவில்லை.

முன்மொழிவுகளை சமர்ப்பித்த 24 நிறுவனங்களில் லங்கா ஐஓசி இடம்பெறவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை,  இலங்கையில் மேலும் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் இருந்து  பதில் கிடைக்கவில்லை என்றும் லங்கா ஐஓசி நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை