புதிதாக அமைக்கப்படவுள்ள சமுர்த்தி வங்கி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ்ப்பாணம் – நெல்லியடி – கரவெட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள சமுர்த்தி வங்கி கட்டடத்திற்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சமுர்த்தி அமைச்சர் அனுப பஸ்குவல் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வடமராட்சி பிரதேச செயலர், யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி முகாமையாளர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.