Welcome to Jettamil

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை

Share

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை

2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த மற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை நேற்று பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்பித்ததுடன், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே அந்த பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு நியமிப்பதற்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என, மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை