Welcome to Jettamil

விகாரை ஒன்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மகிந்தவின் இரகசிய அறை – எழுந்துள்ள சர்ச்சை

Share

விகாரை ஒன்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மகிந்தவின் இரகசிய அறை – எழுந்துள்ள சர்ச்சை

குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறை தொடர்பில் விகாரையை சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களே தற்போது பேசுபொருளாகியுள்ளன.

மேலும், இது தொடர்பான காணொளிகள் இணையத்தங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்றும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருகையில்,

இதன்படி குறித்த அறையில் மகிந்த ராஜபக்ச இரவு தங்கியதில்லை என்றும் ஆனால் அவசரமாக வருகைத்தந்து பல மணிநேரம் இருப்பார் என்றும் அங்கு உள்ள தேரர் ஒருவரால் கூறப்படுகிறது.

அவர் வருவதற்கு முன்னர் விகாராதிபதிக்கு அறிவிப்பார். பின்னர் நாங்கள் தான் சுத்தம் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம். அவர் வருகைத்தந்த பின்னர் விருந்துபசாரம் எல்லாம் நடைபெறுவதால் எங்களுக்கு இந்த பக்கம் வரமுடியாது, நாங்கள் எமது அறையில் இருந்து வெளியில் வருவதில்லை என்றும் குறித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காணொளியில் அறையில் அதி சொகுசான கட்டிலும் மெத்தை போடப்பட்டுள்ளமையும், குளிரூட்டியும் பொறுத்தப்பட்டுள்ளமையும், அறையின் உட்கட்டமைப்புகள் அதி சொகுசான விலையுர்ந்து பொருட்களில் அமைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அந்த அறையில் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியில் செல்லக் கூடிய சிறிய கதவும் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அறைக்கு வருவதற்கான நுழைவாயில் காணப்படுவதாக குறித்த தேரரால் கூறப்படுகிறது.

இரும்பு கதவை பூட்டினால் உள்ளே வாகனம் இருப்பது மற்றும் யாரும் இருப்பது வெயில் தெரியாது என அந்த தேரர் விளக்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த கிராமத்து மக்களுக்கு இவ்வாறான ஒரு அறையிருப்பது தெரியாது என குறிப்பிட்டுகின்றனர்.

அத்தோடு 20 வருடங்களாக குறித்த விகாரைக்கு வந்த செல்லும் ஒருவரும் தனக்கும் தெரியாது என கூறியுள்ளார்.

இந்நிலையில், குருநாகல், பௌத்தாலோக விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்குவதற்காக விசேட அறை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச குருநாகல் வரும் போதெல்லாம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லத்திலேயே தங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ‘அரகலய’ போராட்டக் காலத்தில், அவர் தங்கியிருந்த அந்த இல்லமும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டதாக அவரது தரப்பு நினைவூட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ச விகாரைகளுக்குச் சென்று மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தைப் பெறுவது வழமையானது என்றும், ஆனால் அவர் எந்தவொரு விகாரையிலும் தங்குவதற்காக அறைகளை அமைத்துக் கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்கும் சிங்கள இனத்திற்கும் சேவையாற்றிய ஒரு தலைவருக்கு எதிராக இத்தகைய ‘சேறு பூசும்’ அரசியலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் அரசியல் நகர்வுகளைக் கருத்திற்கொண்டு, மஹிந்த ராஜபக்சவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இத்தகைய போலியான செய்திகள் பரப்பப்படுவதாக ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை