மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக விற்பனை சந்தை
உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு நடத்திய உள்ளூர் விற்பனைச் சந்தை இன்று(28.10.2024) திங்கள் கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த பிரதேச விற்பனைச் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி சம்பிரதாயபூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது பல்வேறு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக் கண்காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்.ஒவ்வொரு பொருட்களின் தரம் பற்றியும் விற்பனையாளர்களால் நுகர்வோருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
காலை 09.00 மணியில் இருந்து மாலை 04.00 வரை இடம்பெறவுள்ளதுடன் அதிகளவான மக்கள் வருகை தந்து பொருட்களை வாங்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது
மேற்படி பிரதேச விற்பனைச் சந்தையின் நிகழ்வில் பிரதேச செயலாளர் ,கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.