Welcome to Jettamil

மட்டக்களப்பு- கல்முனை கோட்டைக்கல்லாறு பாலத்தில் பாரிய விபத்து

Share

மட்டக்களப்பு- கல்முனை கோட்டைக்கல்லாறு பாலத்தில் பாரிய விபத்து

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது நேற்று (07)இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தும், கல்முனை இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கனரக வாகனம் என ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தினால் பேருந்தில் இருந்த சில பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதோடு, கனரகவாகத்தில் பயணித்த சாரதி காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை