Welcome to Jettamil

நல்லையம்பதி அலங்காரகந்தன் முதலாவது உற்சவம்

Share

முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள முருகன் ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன

இவ் உற்சவத்தினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் இன்று காலை பூஜைகள் இடம்பெற்றன.

கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் நல்லை அலங்காரக் கந்தன் உள்வீதியுடாக இடபவாகனத்தில் வலம்வந்து காட்சியளித்தார்.

எதிர்வரும் 18.11.2023 அன்று சூரசம்ஹார உற்சவம் இடம்பெற்று 19.11 மாலை திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடையும்.

கந்தசஷ்டி விதரமுதலாவது நாள் உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் எம்பெருமானை தரிசித்து இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை