Friday, Jan 17, 2025

வலி.வடக்கிலிருந்து யாழ் நகருக்கான புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

By kajee

வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(16) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றிருந்த சமயம் குறித்த பகுதி மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் போக்குவரத்து பிரச்சினையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

17132372683

மக்களின் குறித்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பணிப்புக்கமைய வட பிராந்திய போக்குவரத்து சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இன்றையதினம்(16) குறித்த சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கமையவே இன்று காலை 07 மணியளவில் குறித்த பேருந்து சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பழை வைத்தியசாலையை அடைந்து KKS வீதி வழியாக யாழ் நகரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17132372682

இதனிடையே வறுத்தலைவிளான் சாந்தை சந்தி வரையிலான சேவையை தையிட்டி ஆவளைச் சந்தி வரை நீடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆரம்ப வைபவமும் இன்றையதினம் காலை 6.30 மணிக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு