Welcome to Jettamil

உக்ரைனுக்கு கிடைத்துள்ள புதிய அமெரிக்க உதவி

Share

அமெரிக்கா தற்போது 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை எதிர்கொள்ள வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.

இதனடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியளித்த அமெரிக்காவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவி பொதிக்கு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் பயங்கரவாதத்தில் இருந்து உக்ரைன் வானத்தைப் பாதுகாப்பதற்கும், உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது மிகவும் முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் உதவியாகும்.

அமெரிக்க ஆதரவு மற்றும் உக்ரைனிய – அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையின் வலிமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை