அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை – ஆய்வில் தகவல்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரை இந்த நிலைமை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 589 அரச அதிகாரிகளின் மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 22% அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 29% அரசு அதிகாரிகளை மட்டுமே தேவையான அரசு சேவைகளுக்கு தொடர்பு கொள்ள முடிந்தது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களின் தரைவழி தொலைபேசிகளும் மக்களுக்கு உரிய முறையில் பதிலளிப்பதில்லை என தெரியவந்துள்ளது.