இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இதில் பங்கேற்றிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர், தொல்பொருள், காணிப் பிரச்சினை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.