பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மருத்துவமனையில் அனுமதி
முதல்வரை நேரடியாகச் சாடிய விஜய் – கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் வைத்தியசாலையில்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நேற்று (30.09.2025) அதிகாலை கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாரடைப்பால் மருத்துவமனையில்:
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக உடல் பரிசோதனை செய்ய அழைத்துச் செல்லப்பட்டபோது, பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து, அவர் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





