நேற்றையதினம் (03) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் தலைவர் வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராம அவர்களின் தலைமையில் இந்த பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன்சல வழங்கப்பட்டது.