Welcome to Jettamil

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 26 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

Share

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 26 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் செபு (Cebu) நகரின் கடற்கரைக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் கடுமையாகக் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசயாஸ் (Visayas) பகுதியில் அமைந்துள்ள செபு நகரத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

அனர்த்தத்தின் போது பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை இல்லை:

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை