Welcome to Jettamil

மகாராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி ரணில்

Share

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் அதிகாலை டுபாய் வழியாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோருடன், வெஸ்மினிஸ்டர் மண்டபத்துக்குச் சென்று மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இன்று நடக்கவுள்ள மகாராணியின் இறுதிச் சடங்கிலும் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

அதேவேளை, ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு நேற்று அரசர் சார்ள்ஸ் வழங்கிய இராப்போசன விருந்து நிகழ்விலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை