Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Share

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இணைந்துள்ள தன்னார்வ தொண்டர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு என பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறனர்.

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக இணைந்துள்ள இளைஞர்கள் இரத்ததான முகாம்கள், சிரமதான வேலைத்திட்டங்கள் மரநடுகை வேலைத்திட்டங்கள் பிளாஸ்டிக் அகற்றும் வேலைத்திட்டங்கள் என பல்வேறு சிரமதான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இதனை விடவும் பல்வேறு நன்கொடையாளர்கள் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு வாழ்வாதார உதவித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்

கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோறும் அதிஸ்ரலாப சீட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து அதனூடாக கிடைக்கும் வருமானத்தினூடாக வடக்கு கிழக்கில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ரலாப சீட்டு பணத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தில் ஒரு அங்கமாக இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலாளர்பா.ஜெயகரன் ,உடுவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்ஜெ.றெமின்ரன்,உடுவில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்ம.இரட்ணேஸ்வரி, கிருபா சாரதி பயிற்சி பாடசாலை அதிபர் அ.கிருபாகரன் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட குழுவினர் இணைந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை