இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் மீண்டும் ஒரு கொந்தளிப்பான தன்மை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல மழைக்காலங்கள் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே குறித்த பிரதேசங்களில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.